ந வாஸுதே3வ ப4க்தாநாம் அசுப4ம் வித்3யதே க்வசித் |
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதி4ப4யம் நைவோபஜாயதே ||
வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம், முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா.
புருஷோத்தமனின் பக்தர்கள் எப்படி இருப்பார்கள்?
அவர்களிடம் குரோதம் இருக்காது; மாச்சரியம் என்பது இருக்காது; லோபத்தனம் இருக்காது; நன்மையற்ற மதி என்பது இருக்காது. மாறாகப் பலவித புண்ணியங்களும் அவர்களிடத்தே ஒருங்கு திகழும். அப்படி இருப்போரே புருஷோத்தமனின் பக்தர்கள் ஆவர்.
என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன இடைஞ்சல்கள் இருந்தாலும், என்ன வியாதிகள் இருந்தாலும், மனக்கிலேசங்கள் இருந்தாலும் ’நாராயண’ என்னும் நாமத்தை உச்சரிப்பதால் அத்தனை துக்கங்களும் விடுபட்டுச் சுகம் ஏற்படுகிறது.
காயேன வாசா மனஸேந்த்3ரியைர்வா
பு3த்3த்4யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபா4வாத் |
கரோமி யத்3யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின் சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நமது கலாச்சாரம் வளர இது ஒரு வழிகாட்டல்
ReplyDeleteஇந்த மிக உன்னதமான கடினமான விளக்கத்தை மிக எளிதாக புரியும் வண்ணம் எழுதி தவறின்றி பிரசூரித்து தந்த அன்பரின் பொற்பாதங்களை வணங்குகிறேன். எத்தனை புகழ்ந்தாலும் தகும் என்ற போதிலும் சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது போல,கங்கை நதியை குளிப்பாட்டி புனதமாக்குவது போல என்பதால் முடிக்கிறேன். வணக்கங்கள் பல.
ReplyDeleteநாமங்கள் ஆயிரம் கொண்ட நாராயணா,
ReplyDeleteஉனை நாள்தோறும் போற்றி பாடி பணிகின்றோம்.🙏🙏
I find no words to express my gratitude for your excellent work done ❣️❣️❣️ you have no choice but to enjoy the Blissfulness of the same what we all enjoy. Pranams.
ReplyDeleteA very very useful CONTRIBUTION f
ReplyDeleteSuper thank you sir
ReplyDeleteஉன்னதமான இறை பணி,எங்கும் நலம் உண்டாகட்டும்,வாழ்க வளமுடன்.
ReplyDeleteThank you for the excellent explanation. God bless you
ReplyDeleteமிகவும் பயனுள்ள விளக்கம்
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி
வாழ்க வளமுடன்
மிகவும் அருமை. மிக்க நன்றி
ReplyDeleteEXCELLENT. NARAYANAN BLESS YOU...
ReplyDelete