Saturday, December 4, 2021

அர்சிஷ்மாநர்சித: கும்போ

அர்சிஷ்மாநர்சித: கும்போ4 விசுத்3தா4த்மா விசோத4ந: | 
அநிருத்3தோ4Sப்ரதிரத2: ப்ரத்3யும்நோSமிதவிக்ரம: || 


அர்சிஷ்மாந் -- பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் போது அவர்களால் கண்டு மகிழ அழகிய வடிவில் தோன்றுகிறார் 

அர்சித: -- பின்னானார் வணங்கும் சோதியாகக் கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார் 

கும்ப: -- காதல் உள்ளத்தோடு பக்தர்களால் பக்தி செய்யப்படுகிறார் 

விசுத்தாத்மா -- தூயதிலும் தூய ஆத்மாவாக இருப்பவர் 

விசோதந: -- கோயில்களில் எழுந்தருளி பக்தர்களின் பாபங்களைப் போக்கி அருள் செய்கிறார் 

அநிருத்த: -- அநிருத்தர் என்னும் வியூஹ மூர்த்தியாய்க் காட்சியளிக்கிறார் 

அப்ரதிரத: -- எதிர்த்து நிற்க எவரும் இல்லாதவர் 

ப்ரத்யும்ந: -- மயர்வற மதிநலம் அருள்பவர்; சதுர்வ்யூஹ மூர்த்திகளாக இருப்பவர் 

அமிதவிக்ரம: -- மூவடி கேட்டு ஈரடியால் உலகளந்த திருவிக்கிரமர் 

***

No comments:

Post a Comment