Thursday, December 2, 2021

ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதாநந்தோ

ஸ்வக்ஷ: ஸ்வங்க3: தாநந்தோ3 நந்தி3ர்ஜ்யோதிர்க3ணேச்வர: | 
விஜிதாத்மா விதே4யாத்மா ஸத்கீர்த்திச்சி2ந்நஸம்ய: || 


ஸ்வக்ஷ: -- அருள்நோக்கில் அன்னையின் கண்களையே தம் கண்களாம் எனும்படிக் கொண்டவர் 

ஸ்வங்க: -- அகலகில்லேன் என்று அலர்மகள் விரும்பியுறைகின்ற திருமேனி திகழ்பவர் 

சதாநந்த: -- எப்பொழுதும் ஆனந்தம் பெருகும் திருமால் 

நந்தி: -- திருமகள் கேள்வனாய் என்றும் இணையிலா ஆநந்தம் கொண்டவர் 

ஜ்யோதி: கணேச்வர: -- சுடரும் அயர்வறும் அமரர் கணங்களின் அதிபதி 

விஜிதாத்மா -- பத்துடை அடியவர்க்கு எளியவர் 

விதேயாத்மா -- தூதுபோதல் போன்று பக்தர்கள் தம்மைக் கட்டளையிட்டு அதற்குப் பணிந்து நடத்தலைத் தம் மகிழ்வாய்க் கருதுபவர் 

ஸத்கீர்த்தி: -- அவருடைய எளிமைக் குணத்தால் தலைமைக் குணம் மிக்க புகழ் பெற இருப்பவர் 

சிந்நஸம்சய: -- அவர் அணுகுவதற்கு அரியரோ என்று பக்தர்கள் கொள்ளும் ஐயங்கள் எல்லாம் தம்முடைய எளிமைக் குணத்தால் நீங்கும்படி இருப்பவர். 

***

No comments:

Post a Comment