Sunday, October 24, 2021

ருத்ரோ பஹுசிரா பப்ரு:

ருத்3ரோ ப3ஹுசிரா ப3ப்4ரு: விச்வயோநி: சுசிச்ரவா: |
அம்ருதஸ் சாச்வதஸ் ஸ்தா2ணு: வராரோஹோ மஹாதபா: || 

 


ருத்ர: -- தமது அழகாலும், கல்யாண குணங்களாலும், அருட்செயல்களாலும் பக்தர்களை ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்பவர். 

பஹுசிரா: -- ஆயிரம் தலைகளால் படைப்பைத் தாங்குபவர் 

பப்ரு: -- பிரபஞ்சத்தின் ஆதாரமாய் இருப்பவர் 

விச்வயோநி: -- பக்தகோடிகள் அனைவரோடும் ஒன்றுறக் கலக்கும் சீலர் 

சுசிச்ரவா: -- பக்தர்களின் வாய்மொழியை அமுதம் என உவப்பவர் 

அம்ருத: -- பக்தர்களுக்கு என்றும் பேரமுதமாய் இருப்பவர் 

சாச்வதஸ்ஸ்தாணு: - நிலைத்த அமுதம், மாறாத அமுதம் அவரே 

வராரோஹ: -- அடைய வேண்டிய உயர்வற உயர்ந்த இலட்சியம் அவரே 

மஹாதபா: -- உயர்வற உயர்ந்த இலட்சியமாய் இருப்பதோடு அதை அடைவிக்கும் மிக்குயர்ந்த தவமாகவும் தானே இருப்பவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment