அக்3ரணீர் க்3ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்தா4 விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||
அக்ரணீ: -- மயர்வற மதிநலம் தந்து உயர்வற உயர்ந்த நிலைக்கு உயர்த்துபவர்
க்ராமணீ: -- பரம நிலைக்குத் தாமே சாதுக்களை அழைத்துச் செல்பவர்
ஸ்ரீமான் -- அகலகில்லேன் என்று திருமகள் குலவும் தாமரைக்கண்ணர்
ந்யாய: -- பக்தர்களிடம் என்றும் தவறாத நியாயம் உள்ளவர்
நேதா -- பக்தர்களை ஸம்ஸார வட்டத்தில் சிக்காவண்ணம் வழிநடத்திச் செல்பவர்
ஸமீரண: -- பக்தர்கள் விழையும் பலன்களை நடத்திக் கொடுப்பவர்
ஸஹஸ்ரமூர்தா -- ஆயிரம் தலையுடன் திகழ்பவர்
விச்வாத்மா -- அனைத்தினுள்ளும் உறையும் உயிர் அவரே
ஸஹஸ்ராக்ஷ: -- ஆயிரம் அருட்கண்களால் திருநோக்கு கொள்பவர்
ஸஹஸ்ரபாத் -- ஆயிரம் அடிகளால் அகிலம் நிறைந்தவர்
***
No comments:
Post a Comment