அப்ரமேயோ ஹ்ருஷீகேச: பத்3மநாபோ4Sமரப்ரபு4:
|
விச்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்த2விஷ்ட2ஸ்ஸ்த2விரோ த்4ருவ: ||
அப்ரமேய: -- அறிவதற்கு அரியர்
ஹ்ருஷீகேச: -- புலன்களுக்குப் புகலிடமானவர்
பத்மநாப: -- படைப்பு மலரும் நாபியை உடையவர்
அமரப்ரபு: -- அமரர்க்கெல்லாம் அவரே ப்ரபு
விச்வகர்மா -- நான்முகன் தோன்றுவதற்கு முன்னமே தத்துவங்களைப் படைப்பவர்
மனு: -- படைப்பைக் குறித்துச் சிந்திப்பவர்
த்வஷ்டா -- படைப்பு நிகழும் சூழலைப் படைப்பவர்
ஸ்தவிஷ்ட: -- அனைத்திற்கும் அற உயர்ந்த பெரியோன்
ஸ்தவிர: -- எல்லாக் காலத்திலும் இருப்பவர்
த்ருவ: -- ஏது நிகழினும் எந்த மாற்றமும் அண்டாதவர்
Srirangam Mohanarangan
***
அக்3ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்த3ன: |
ப்ரபூ4த: த்ரிககுப்3தா4ம பவித்ரம் மங்க3ளம் பரம் ||
*
அக்ராஹ்ய: - எவ்விதத்திலும் எந்தக் கரணத்தினாலும் சிக்காதவர் என்னும்படி அனைத்துக்கும் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பவர்.
சாச்வத: - மாறி மாறி வரும் படைப்பு ஒடுக்கம் ஆகியவைகளில் ஓய்வின்றி ஒரே படித்தாய் இருப்பவர்.
க்ருஷ்ண: - தம் லீலையாகிய சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளில் மாறாத ஆனந்த மூர்த்தியாய் இருப்பவர்.
லோஹிதாக்ஷ: - தம் மாறாத மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் செந்தாமரை நிறமான கண்களைப் படைத்தவர்.
ப்ரதர்தன: - பிரளயகாலத்தில் அனைத்தையும் நாம ரூபங்களை நீக்கி ஸம்ஹரிப்பவர்.
ப்ரபூத: - பிரபஞ்சத்தில் அனைத்தும் ஸம்ஹரிக்கப்பட்டாலும் மாற்றமும் அளவும் அற்ற போக ஸ்தானமாகப் பரமபதத்தை உடையவர்.
த்ரிககுப்தாமா - மும்மடங்கு பிரபஞ்சத்தினும் பெரிது என்னும் அளவிலாத பெருக்கம் உடைய த்ரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவர்.
பவித்ரம் - தோஷங்கள் அனைத்துக்கும் எதிர்த்தட்டான பரிசுத்த ஸ்வரூபம் உடையவர்.
மங்களம்பரம் - தம்மைத் தியானிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளும் பரம்பொருளாய் இருப்பவர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment