மஹாபு3த்3தி4ர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்3யுதி: |
அநிர்தே3ச்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்3ரித்4ருத் ||
மஹாபுத்தி: -- அனைத்தையும் அறியும் மகாபுத்தியுடையவர்
மஹாவீர்ய: -- எந்த மாற்றங்கள் நிகழினும் தம்மில் எந்த மாற்றமும் ஏற்படாத பெரும் வீரியம் கொண்டவர்
மஹாசக்தி: -- ஆக்கும் ஆற்றலும் ஆக்கப்படும் பொருளுமாய் இருக்கும் மஹாசக்தி ஆனவர்
மஹாத்யுதி: -- அளவிறந்த பேரொளி அவர்
அநிர்தேச்யவபு: -- அறுதியிட ஒண்ணா வடிவினர்
ஸ்ரீமான் -- திருமகள் கேள்வர்
அமேயாத்மா -- அளவிலாப் பெருமையர்
மஹாத்ரித்ருத் -- பெருமலைகளையும் தாங்கும் ஆதாரம் அவரே
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment