Monday, October 25, 2021

மரீசிர் தமனோ ஹம்ஸ:

மரீசிர் த3மனோ ஹம்ஸ: ஸுபர்ணோ பு4ஜகோ3த்தம: | 
ஹிரண்யநாப4ஸ் ஸுதபா: பத்3மநாப4: ப்ரஜாபதி: || 



மரீசி: -- எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாலும் மங்காத வளரொளி மிக்கோன் 

தமன: -- ஸம்ஸார வெப்பத்தைத் தணிக்கும் தண்ணழகு வடிவினர் 

ஹம்ஸ: -- இயக்கம் எல்லாவற்றுக்கும் மூலமாய் இலகும் அருளுருவினர் 

ஸுபர்ண: -- பவக்கடலில் உயிர்களைக்கரையேற்றும் அழகிய சிறகுகள் உடையோன் 

புஜகோத்தம: -- ஆதிசேஷனின் நாதனாய் இருப்பவர் 

ஹிரண்யநாப: -- பொற்க்கொப்பூழில் பூணழகர் 

ஸுதபா: -- ஞானமாம் நல்தவ வடிவினர் 

பத்மநாப: -- கொப்பூழில் எழுகமலப் பூவழகர் 

ப்ரஜாபதி: -- உலகெலாம் படைத்துக் காத்துப் புரக்கும் எந்தை 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment