ப்4ராஜிஷ்ணுர் போ4ஜனம் போ4க்தா ஸஹிஷ்ணு: ஜக3தா3தி3ஜ: |
அநகோ4 விஜயோ ஜேதா விச்வயோநி: புநர்வஸு: ||
ப்ராஜிஷ்ணு: -- எங்கும் நிறைந்த பேரொளியாய், தம்மை தியானிக்கும் பக்தர்களுக்குத் தன்னைக் காணச் செய்பவர்
போஜனம் -- பக்தர்களுக்குத் தாமே உண்ணும் உணவாய் இருப்பவர்
போக்தா -- பக்தர்களின் அன்பைத் துய்ப்பவர்
ஸஹிஷ்ணு: -- அடியார்களின் தவறுகளை சகித்துக் கொள்ளும் இயல்புடையவர்
ஜகதாதிஜ: -- உலகைக் காக்க வேண்டித் தாமே முதன்முன்னம் அவதாரம் எடுப்பவர்
அநக: -- அவதாரம் எடுத்துப் பிறப்பினும் பிறவியின் தீங்கு அண்டமுடியாதவர்
விஜய: -- பிரபஞ்சத்தில் எப்பொழுதும் வெற்றியாய் நிற்பவர்
ஜேதா -- அனைவரையும் வென்று தம்முள் அடக்குபவர்
விச்வயோநி: -- அனைத்திற்கும் தாமே ஆதியான காரணம்
புநர்வஸு: -- ஒவ்வோருயிரிலும் அந்தராத்மாவாய் இருப்பவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment