மஹேஷ்வாஸோ மஹீப4ர்த்தா ஸ்ரீநிவாஸஸ்ஸதாம் க3தி: |
அநிருத்3த4: ஸுராநந்தோ3 கோ3விந்தோ3 கோ3விதா3ம் பதி: ||
மஹேஷ்வாஸ: -- அம்பு பொய்க்காத பெருவில் வீரர்
மஹீபர்த்தா -- உலகத்தை உவப்புடன் தாங்கி நிற்கும் வராஹர்
ஸ்ரீநிவாஸ: -- திருமகள் அகலகில்லேன் என்றுறை மார்பினர்
ஸதாம் கதி: -- வேண்டியதனைத்தும் வழங்கும் நல்கதி அவரே
அநிருத்த: -- மனிதர்க்கு நன்மையே ஆற்றும் அநிருத்தர்
ஸுராநந்த: -- தேவர்க்கு இடர் போக்கி மகிழ்ச்சி நல்கும் பெம்மான்
கோவிந்த: -- ஆயர்தேவு, உலகு புரக்கும் கோலவராகன், வேதவாக்கின் நாயகன்
கோவிதாம்பதி: -- வேதமுணர் ஞானியர்தம் தலைவன்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment