வேத்3யோ வைத்3யஸ்ஸதா3யோகீ3 வீரஹா மாத4வோ மது4: |
அதீந்த்3ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாப3ல: ||
வேத்ய: -- இந்த உயிர்கள் தம்மை அறியவேண்டி அவதாரங்கள் எடுப்பவர்
வைத்ய: -- பவநோய் என்னும் உலக ஆசையாம் பிணியை அகற்றும் வைத்தியர்
ஸதாயோகீ -- அடியார்களின் நலனுக்காக என்றும் விழிப்புடன் முனைபவர்
வீரஹா -- ஆற்றல் மிக்க அசுரரை அழிப்பவர்
மாதவ: -- உயர்ந்த ஞானத்தின் தலைவர்
மது: -- ஞானியர் களிக்கும் தேனாக இருப்பவர்
அதீந்த்ரிய: -- புலன்களுக்கெட்டாப் பேரமுதாய் இருப்பவர்
மஹாமாய: -- எங்கும் இருப்பினும் இந்திரியங்களுக்குப் புலனாகாத மாயை வாய்ந்தவர்
மஹோத்ஸாஹ: -- படைத்தல் காத்தல் ஒடுக்கல் என்பதில் என்றும் உத்ஸாகம் நிறைந்தவர்
மஹாபல: -- பிரபஞ்சத்தையே இலகுவாகத் தாங்கும் பெரும்பலம் கொண்டவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment