Tuesday, October 26, 2021

அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ:

அம்ருத்யு: ஸர்வத்3ருக் ஸிம்ஹ: ஸந்தா4தா ஸந்தி4மாந் ஸ்தி2ர: | 
அஜோது3ர்மர்ஷணச்சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || 



அம்ருத்யு: -- அழிவோ மறைவோ எக்காலமும் இல்லாதவர்

ஸர்வத்ருக் -- அனைத்தையும் ஒவ்வொன்றையும் பார்ப்பவர்

ஸிம்ஹ: -- அடியார்க்கு வரும் அழிவையும் தீமையையும் நீக்கும் நரசிம்ஹர்

ஸந்தாதா -- பக்தர்களுக்குக் கோரிய பலன்களை அருள்பவர்

ஸந்திமாந் -- தம்மை வந்தடைந்த பக்தர்களை விட்டு என்றும் நீங்காதவர்

ஸ்திர: -- தம்பால் சரணடைந்த பக்தர்களிடம் குறைகள் இருப்பினும் அதனால் சிறிதும் மாறாத அருளுள்ளம் கொண்டவர்

அஜ: -- அவதாரங்கள் பல எடுப்பினும் அவர் என்றும் பிறவிக்கு உட்படாதவர்

துர்மர்ஷண: -- அடியாரைப் பகைப்போர்க்கு ஆற்றொணா கடுமை உடையவர்

சாஸ்தா -- தர்மத்தினின்று பிறழ்வோரைத் தண்டித்துத் திருத்துபவர்

விச்ருதாத்மா - சுருதிகளால் என்றும் புகழப்படுபவர்

ஸுராரிஹா -- தேவர்களின் எதிரிகளை அழிப்பவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment