ஸ்வயம்பூ4ச் சம்பு4ராதி3த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி3நித4நோ தா4தா விதா4தா தா4துருத்தம: ||
ஸ்வயம்பூ: -- கருணையால் பிறந்து அருள்பவர்
சம்பு: -- ஆனந்தம் அளிப்பவர்
ஆதித்ய: - ஸூர்ய மண்டலத்தில் உறைபவர்
புஷ்கராக்ஷ: -- மலர்ந்த தாமரைக் கண்ணினர்
மஹாஸ்வன: -- வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர்
அநாதிநிதந: -- அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர்
தாதா -- இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான்
விதாதா -- உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர்
தாதுருத்தம: -- படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment