அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்3த4: ஸித்3தி4ஸ்ஸர்வாதி3ரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோக3விநி:ஸ்ருத: ||
அஜ: -- கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர்.
அடியார்களின் பிறவித் துன்பத்தை நீக்குபவர்.
ஸர்வேச்வர: -- அனைத்துத் தடைகளையும் அகற்றி அடியார்களுக்கு அருள்பாலிப்பவர்.
ஸித்த: -- அடியார்க்கு அருள எப்பொழுதும் சித்தமாக இருப்பவர்
ஸித்தி: -- அடைய வேண்டிய லட்சியமாய் இருப்பவர்
ஸர்வாதி: -- அனைத்து பலன்களையும் அருளும் மூலமாக இருப்பவர்
அச்யுத: -- அடியார்களை என்றும் நழுவ விடாதவர்
வ்ருஷாகபி: -- தர்மத்தின் உருவான கோல வராஹர்
அமேயாத்மா -- அளக்கலாகா பெருமையும் அருளும் கொண்டவர்
ஸர்வயோக விநிஸ்ருத: -- அனைத்து வழிகளையும் அவரே நடத்துவதால் எந்த யோகத்தாலும் அடையப்படக் கூடியவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment