ஈச்வரோ விக்ரமீ த4ந்வீ மேதா4வீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ து3ராத4ர்ஷ: க்ருதக்ஞ: க்ருதிராத்மவாந் ||
ஈச்வர: -- உலகை ஆள்வதைப் போல முக்தியிலும் ஆளும் ஈச்வரர்
விக்ரமீ -- தடைப்படாத சங்கல்பம் உடையவர்
தந்வீ - குறித்த இலக்கைத் தவறாது எய்யும் வில் உடையவர்
மேதாவீ -- பல அறிவுகளையும் ஒரே நேரத்தில் கிரகிப்பவர்
விக்ரம: -- வேதவடிவான கருடன் மீது எங்கும் தடையின்றிச் செல்பவர்
க்ரம: -- எதையும் அளந்து அகப்படுத்தும் விரிவுடையவர்
அநுத்தம: -- உயர்வற உயர்ந்தவர்
துராதர்ஷ: -- எதனாலும் எட்டாத நிலையுடையவர்
க்ருதக்ஞ: -- அடியார் செய்யும் மிகச்சிறு முனைப்பையும் மிகவும் போற்றுபவர்
க்ருதி: -- நாம் செய்யும் எந்த நற்செயலும் அவர் செய்ய வைப்பதுவே
ஆத்மவாந் -- நற்செயல் புரிபவரைத் தம் உயிர்போல் கருதுபவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment