Sunday, October 24, 2021

ஈசான: ப்ராணத: ப்ராணோ

சா: ப்ராணத3: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட2: ப்ரஜாபதி: |
ஹிரண்யக3ர்ப்போ4 பூ4க3ர்ப்போ4 மாத4வோ மது4ஸூத3ந: || 

 


ஈசான: -- அனைத்தையும் உள்ளிருந்து ஆண்டு நடத்துபவர். 

ப்ராணத: -- அடியார் தம்மை நோக்கி வருவதற்கான வலுவையும் தாமே அளிப்பவர். 

ப்ராண: - அடியார்க்கு உயிரினும் மேலான உயிராய் இருப்பவர். 

ஜ்யேஷ்ட: - பழமைக்கும் பழமையான பரம்பொருள். 

ச்ரேஷ்ட: -- எத்தனை புகழினும் அதற்கும் எட்டாது சிறந்தவர். 

ப்ரஜாபதி: -- அயர்வறும் அமரர்கள் அதிபதி. 

ஹிரண்யகர்ப்ப: -- சத்வமே உருவான பொன்னுலகின் ஆருயிர். 

பூகர்ப்ப: -- பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை. 

மாதவ: -- திருவுக்கும் திருவாகிய செல்வர். 

மதுஸூதந: -- மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment