உபேந்த்3ரோ வாமன: ப்ராம்சு: அமோக4ச்சுசிரூர்ஜித: |
அதீந்த்3ரஸ்ஸங்க்3ரஹஸ்ஸர்கோ3 த்4ருதாத்மா நியமோ யம: ||
உபேந்த்ர: -- இந்திரனுக்கு இளவல்; இந்திரர்க்கும் மேற்பட்டவர்
(முன் நாமம் புநர்வஸு: ராமனைக் குறிக்கும், உபேந்திரன் கிருஷ்ணனைக் குறிக்கும்.- ஸ்ரீ பட்டர்)
வாமன: -- இந்திரனுக்காக் குறள் வாமனனாய்ச் சென்று இரந்தவர்
ப்ராம்சு: -- நின்றளந்த நெடுமாலாய் வளர்ந்த திருவிக்கிரமர்
அமோக: -- தாம் செய்வதனைத்தும் நல்லவர்க்கு மங்களமாய் அமையும் பெற்றியர்
சுசி: -- தம்மை தியானிப்பார்க்குத் தூய்மை நல்குபவர்; தாம் எதுவும் எவரிடத்தும் வேண்டாத தூயர்
ஊர்ஜித: -- எவரையும் வென்றடக்கும் விறலுடையோர்
அதீந்த்ர: -- இந்திரர்க்கும் பிரபுவாய் ஆனவர்
ஸங்க்ரஹ: -- பக்தியால் தம்மை எய்தும், கட்டவும் ஆனவர்
ஸர்க்க: -- படைப்பனைத்தின் மீதும் தம் பாத அடையாளம் பதித்து உறவை நிலைநாட்டியவர்
த்ருதாத்மா -- ஆத்மாக்கள் அனைத்திற்கும் இருப்பு நல்கும் பேருயிர்
நியம: -- அனைத்து உயிர்களையும் நியமிப்பவர்
யம: -- இதயத்தில் வீற்று உயிரனைத்தையும் ஆள்பவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment