Wednesday, October 27, 2021

குருர்குருதமோ தாம

கு3ருர்கு3ருதமோ தா4ம ஸத்யஸ்ஸத்ய பராக்ரம: |

நிமிஷோSநிமிஷஸ்ரக்3வீ வாசஸ்பதிருதா3ரதீ4:|| 

 

குரு: குருதம: - உபதேசிக்கும் குரு தத்துவமாய் நான்முகர்க்கே உபதேசித்த உத்தம ஆதிகுருவும் ஆனவர் 


தாம: - உபதேசிக்கும் குரு மட்டுமன்றி உற்றடையும் உன்னத நிலையாகவும் இருப்பவர் 

ஸத்ய: - ஸாதுக்களின் நன்மையாய்த் திகழ்பவர் 

ஸத்ய பராக்ரம: -- ஸாதுக்களோடு என்றும் மெய்யாய்த் திகழ்பவர் 

நிமிஷ: -- யோகநித்ரையில் அரைக்கண் மூடியும், சாதுக்களுக்குத் தீமை செய்வோரிடம் அருள்நோக்கு அற்றவராயும் இருப்பவர் 

அநிமிஷ: -- சாதுக்களைக் காப்பதில் இமைக்காமல் விழிப்புடன் இருப்பவர் 

ஸ்ரக்வீ -- படைப்பில் பூதங்கள், தன்மாத்ரைகள் என்னும் தத்துவத்தை வனமாலையாய்ப் பூண்டவர் 

வாசஸ்பதி: உதாரதீ: -- அனைத்து வித்யைகளின் உறைவிடமும் தலைவரும் அவரே. அனைத்தையும் அறியும் நன்மதியும் அவரே. 

***

No comments:

Post a Comment