Sunday, October 24, 2021

பூதாத்மா பரமாத்மா ச

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா க3தி: |
அவ்யய: புருஷஸ்ஸாக்ஷீ க்ஷேத்ரக்ஞோSக்ஷர ஏவ ச || 




பூதாத்மா -- உள்ளுயிராயிருந்தும் உடல்களுடைய களங்கம் தொடாத தூயர்

பரமாத்மா ச -- தமக்கு உள்ளுயிராய்ப் பிறிதொன்று இல்லாது தாமே அனைத்தின் உயிராய் நிற்பவர்

முக்தானாம் பரமா கதி: -- முக்தர்களுக்கான அறுதியான கதி அவர்

அவ்யய: -- தாம் மாறாதவர், தம்மை அடைந்தாரையும் மாறாநிலையில் உய்ப்பவர்

புருஷ: - தம்மை அடைந்தாரை என்றும் புதிதாய் ஆனந்திப்பவர்

சாக்ஷீ - முக்தர்களின் ஆனந்தத்திற்கு சாக்ஷியாய் என்றும் ஆனந்திப்பவர்

க்ஷேத்ரக்ஞ: -- அறிவுக்கு அறிவாய் நின்று உயர்நிலையை அறிபவர்

அக்ஷர: -- மாற்றமும் எல்லையும் அற்றவர்

ஏவ ச -- இவ்வண்ணமே என்றும் இருப்பவர். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

8 comments:

  1. அருமையான முயற்சி. கடின உழைப்பு மற்றும் சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையின் வெளிப்பாடு. மஹாவிஷ்ணுவின் பரிபூரண அருள் மற்றும் ஆசிகளுடன் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Very useful indeed.. great information n great 👌 effort

    ReplyDelete
  3. Replies
    1. Thanks for the wonderful explanation

      Delete
  4. Readily available in our mobile.very useful.thanks a lot

    ReplyDelete
  5. Easy to memorise when we know the meaning

    ReplyDelete
  6. Excellent translation.

    ReplyDelete