லோகாத்4யக்ஷ: ஸுராத்4யக்ஷ: த4ர்மாத்4யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ: சதுர்த3ம்ஷ்ட்ர: சதுர்பு4ஜ: ||
லோகாத்யக்ஷ: - உலகை நேரடியாகத் தாமே கண்காணிப்பவர்
ஸுராத்யக்ஷ: - தேவர்களையும் அவரே கண்காணிக்கிறார்
தர்மாத்யக்ஷ: - தர்மத்தையும் அவரே கவனிக்கின்றார்
க்ருதாக்ருத: - ஆக்கலும் அழித்தலும், செய்கையும் பலனும் அவரே
சதுராத்மா சதுர்வ்யூஹ: - நால்விதமான இயல்பாகியும் நான்கு வியூஹமூர்த்திகளாகவும் இருப்பவர்
சதுர்தம்ஷ்ட்ர: - நரம் கலந்த சிங்கமாய் இருப்பவர்
சதுர்புஜ: - சங்கம் சக்ரம் கதை சார்ங்கம் என்று நான்கு படை தரிக்கும் கரங்கள் நான்குடையவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment