Sunday, October 24, 2021

ஸுரேச: சரணம் சர்ம

ஸுரே: ரணம் ர்ம விச்வரேதா: ப்ரஜாப4வ: |
அஹஸ்ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யயஸ்ஸர்வத3ர்: || 

 


ஸுரேச: -- தேவர்கள் அதிபதி 

சரணம் -- அனைவர்க்கும் உற்ற புகலும் காப்பும் ஆனவர் 

சர்ம -- புகலடைந்தோர்க்குப் பொன்றா பேரின்பம் 

விச்வரேதா: -- அனைத்திற்கும் அனைத்து காரணமுமாய் ஆனவர் 

ப்ரஜாபவ: -- உயிர்க்குல முழுமைக்கும் உற்ற நிலையம் 

அஹ: -- இருளேயற்ற ஒரு பெரும் பகலாய் ஒளிர்பவர் 

ஸம்வத்ஸர: -- கால வடிவாய் உயிர்களுக்குள் இருந்து கைதூக்கி விடுபவர் 

வ்யால: -- பக்தியுடன் உற்றோரை ஒரு பொழுதும் விலக்காது அணைத்துக் கொள்ளும் பரந்த அருள் கைகளை உடையவர் 

ப்ரத்யய: -- உணர்வும் நம்பிக்கையும் ஆனவர் 

ஸர்வதர்சந: -- பக்தர்களுக்குத் தம் மகிமை அனைத்தையும் ஒளிக்காது காட்டுபவர் 

Srirangam Mohanarangan 

***

No comments:

Post a Comment