Tuesday, March 29, 2022

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பூர்வாங்க சுலோகங்கள் - முதல் பகுதி

சுக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பு4ஜம் | 
ப்ரஸன்னவத3னம் த்4யாயேத் சர்வ விக்4னோபசாந்தயே || 

அணிவது வெண்ணுடை தண்ணிலவு போல் வண்ணம் 
அருள்கரம் நான்கு திகழும் ஒளிவதனம் கொண்ட விஷ்ணுவைத் 
தியானிக்க வேண்டும் அனைத்து இடர்ப்பாடும் அமைதியுறவே. 

யஸ்யத்3விரத3 வக்த்ராத்3யா: பாரிஷத்3யா: பரச்சதம் | 
விக்4னம் நிக்4னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே || 

தந்தம் இரண்டும் ஆனைமுகமும் கொண்ட கஜமுகன் போன்று 
அமரர்கணங்கள் அவற்றுக்கெல்லாம் தலைவர் விஷவக்ஸேனர் 
அனைத்து இடரும் என்றும் கடியும் அவரையே புகலாய் அடைவம் யாமே. 

வ்யாஸம் வசிஷ்ட நப்தாரம் க்தே: பௌத்ரம் அகல்மஷம் | 
பராராத்மஜம் வந்தே3 சுகதாதம் தபோநிதி4ம் || 

வசிட்டரின் வழித்தோன்றலை, 
சக்தியின் பேரரை, 
பராசரரின் புதல்வரை, 
சுகரின் தந்தையை, 
தோஷம் எதுவும் அற்றவரை 
தவத்தையே நிதியாய்க் கொண்டவரை 
அந்த வியாசரை வணங்குவன் யானே. 

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே | 
நமோ வை ப்3ரஹ்மநித4யே வாசிஷ்டாய நமோ நம: || 

வியாசருக்கு 
விஷ்ணுவே உருவாய் ஆனவருக்கு 
வியாசரே உருவாய் ஆனவருக்கு 
விஷ்ணுவே தாமாம் அவருக்கு 
வசிஷ்டரின் வழியில் வந்தவருக்கு 
நமோ நம என்று நமஸ்காரம் 
பிரம்மம் என்னும் வேதநிதியைக் கொண்டவருக்கு 
பிரம்மஞானியாய் பிரம்மமாய் ஆன நிதி அவருக்கு 
நமஸ்காரம் என்றும் நமோ நம. 

அவிகாராய சுத்3தா4ய நித்யாய பரமாத்மனே | 
ஸதை3கரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || 

உருவம் சற்றும் மாறுபடாதோன் 
முழுதும் தூயோன் என்றும் தூயோன் 
எப்பொழுதும் உரு ஒன்றே பூண்டோன் 
பரமாத்மா அவன் விஷ்ணு ஆவோன் 
அனைத்திலும் வெற்றி முழுதும் வெற்றி கொண்டவனாமே. 

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார ப3ந்த4னாத் | 
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரப4விஷ்ணவே || 
 
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப4விஷ்ணவே || 

யாரை நினைத்தமாத்திரம் பிறவிக்கட்டெலாம் 
விட்டொழிந்து விடுதலை ஆகுமோ அவரை வணங்குவோம் 
விஷ்ணுவை அந்தப் பெருமை மிகுந்த விஷ்ணுவை 
ஓம் எனும் பரமாத்மா அவரையே வணங்குவோம் 
விஷ்ணுவை பெருமை மிகுந்த விஷ்ணுவையே. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

2 comments:

  1. சுக்லாம் பரதம் என்னும் சுலோகத்தில் விஷ்ணு என்று கொடுக்கப்பட்டிருந்தாலும் இது விநாயக துதியாகத்தானே கருதப்படுகிறது. வெண்ணிலவின் நிறம் கரியமாலுக்கு எப்படிப் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. எந்த இடர்பாடும் இல்லாமல் விஷ்ணுவை துதிக்கவேண்டும் என விநாயகரை துதித்துக் விட்டு ஆரம்பிக்கிறது

      Delete